New year offer 2017

இலங்கை செய்திகள்

மலேசியாவில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட பிணை

10/29/2019

மலேசியாவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளுக்கு, ஆதரவாக செயற்பட்டமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ள 12 பேரில் 10 பேருக்கு எதிராக இன்று நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எனினும், இரண்டு பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படாமைக்கான காரணம் எவையும் வெளியிடப்படவில்லை.

இவர்களை பிணையில் அனுமதிக்குமாறு சட்டத்தரணிகள் விடுத்தக் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்.

அத்துடன் விசாரணைகளை டிசம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டமை மற்றும் நிதிசேகரித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த 12 பேரும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டனர்.

இதில் இரண்டு அரசியல்வாதிகளும் அடங்குகின்றனர்.

இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள்தண்டனை அல்லது 30 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட மலேசிய சட்டத்தில் இடமிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.