New year offer 2017

இலங்கை செய்திகள்

வசந்த சேனாநாயக்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா

10/30/2019

வெளியுறவு ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவுக்கு எதிராக இன்னும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டமைக்காக வசந்த சேனாநாயக்க கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

எனினும் இதனை கபீர் ஹாசிம் மறுத்துள்ளார். இந்தநிலையில் கபீரின் கருத்து தொடர்பில் அகில விராஜ் காரியவசம் எவ்வித மாற்றுக் கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை.