New year offer 2017

இலங்கை செய்திகள்

புலிகளுடன் போரிட்டாரா கோத்தபாய யார் யாரை சுட்டுக் கொன்றார்

10/30/2019

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, விடுதலைப் புலிகளுடன் போரிடவில்லை எனவும் அவர் சாதாரண மக்களிடமே போரிட்டதாகவும் சமூக செயற்பட்டாளரான சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச, விடுதலைப் புலிகளுடன் போரிடவில்லை என்பது உண்மை. அவர் தொழிலாளர்கள், மீனவர்கள் உட்பட சாதாரண மக்களுடனேயே போரிட்டார்.

ஊடகவியலாளர்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்திய சாதாரண மக்களை சுட்டுக்கொன்றார். எம்மை கொலை செய்ய வரும் கோத்தபாய ராஜபக்சவை தோற்கடித்தே தீருவோம் எனவும் சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.