New year offer 2017

இலங்கை செய்திகள்

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் விடயத்தில் பிரித்தானிய நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

10/31/2019

கடந்த 28ஆம் திகதி ஆர்.எச்.எனும் தமிழ் அகதியுனுடைய வழக்கை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகின்றது என பிரித்தானியாவில் உள்ள சிரேஷ்ட சட்டத்தரணி கணநாதன் தெரிவித்துள்ளார்.

எமது ஊடகத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் அவர்,

பிரித்தானிய அகதி தஞ்சக் கோரிக்கை வரலாற்றில் வரலாற்று திருப்புமுனையான தீர்ப்பினை பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது.

இலங்கையில் தமிழ் அகதிகள் விடயத்தில் அகதி தஞ்சம் கேட்கின்ற விடயத்தில் பிரித்தானியா நீதிமன்றங்கள் புதிய கையாளுகையை கொண்டுவர வேண்டும் என சிந்தித்து முடிவெடுத்துள்ளது என கூறியுள்ளார்.