New year offer 2017

இலங்கை செய்திகள்

வெளியாகியுள்ள குரல் பதிவுகள் குறித்து சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு

01/13/2020

தொலைபேசி  உரையாடல்கள் உள்ளிட்ட  சமூக மயப்படுத்தப்பட முடியாத தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படுகின்றமையால் எதிர்காலத்தில் நாம் கவலையடைய வேண்டிய நிலைமையே ஏற்படும் எனத் தெரிவித்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, வெளியிடப்படுகின்ற விடயங்கள் சட்ட விரோதமானவையாகக் காணப்பட்டால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

போதிருக்காராம ரஜமா விகாரையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :

தற்போது அண்மையில் வெளியான குரல் பதிவுகள் தொடர்பிலேயே அதிகம் பேசப்படுகிறது. இவ்வாறு தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான குரல் பதிவுகள் சமூக வலைத்தளங்களுக்கு ஊடாக வெளியிடப்படுவதால் சமூகத்தில் ஒழுக்க சீர்கேடுகள் ஏற்படுகின்றன.

தொழிநுட்ப வளர்ச்சிகள் இவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகின்றன. நவீன தொழிநுட்ப வளர்ச்சி ஒரு நாட்டின் நன்மையான விடயங்களுக்காக பயன்பட்டாலும் தொழிநுட்பத்துக்கு அடிமையானோரால் சமூகம் சிதைந்துவிட்டது.

தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட சமூக மயப்படுத்தப்பட முடியாத தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படுகின்றமையால் எதிர்காலத்தில் நாம் கவலையடைய வேண்டிய நிலைமை ஏற்படும்.

எனினும் வெளியிடப்படுகின்ற விடயங்கள் சட்ட விரோதமானவையாகக் காணப்பட்டால் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மறுக்கப்பட வேண்டிய விடயமல்ல.

தேரவாதம் முறையாக பின்பற்றப்படும் நாடு என்ற வகையில் இலங்கை ஏனைய நாடுகளுக்கு தர்மத்தையே எடுத்துக் காட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதன் போது எதிர்கால சந்ததியினருக்காக இவ்வாறான விடயங்கள் தொடர்பில் உரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மகா சங்கத்தினர் கேட்டுக் கொண்டனர்.