New year offer 2017

இலங்கை செய்திகள்

மஹிந்த - இந்தியா - இலங்கைக்கிடையில் உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்

02/09/2020

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவித் உடனான சந்திப்பில் அரசியல், அபிவிருத்தி, பாதுகாப்பு, வரத்தகம், கலசாரம் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அந் நாட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேற்யை தினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந் நிலையில் இக் கலந்துரையாடல் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.