New year offer 2017

இலங்கை செய்திகள்

வயதெல்லை 45 -விண்ணப்பங்கள் 20 ஆம் திகதி வரை கோரப்படும்

02/10/2020

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என, ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த விண்ணப்பப்படிவங்கள், எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் அதற்கான காலம் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, முன்னர் வயதெல்லை 35 ஆக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவ்வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.