New year offer 2017

இலங்கை செய்திகள்

சஜித் தலைமையிலான புதிய கூட்டணியின் பெயர், சின்னம் அறிமுகம்!

02/10/2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையில் ஒரு கூட்டணி தேர்தலில் கட்சியாக போட்டியிடுவதற்கு தேவையான ஆவணங்களை தேர்தல்கள் ஆணையகத்தில் சமர்ப்பித்துள்ளது.

அதன்படி சஜித் தலைமையிலான புதிய கூட்டணி 'தேசிய அமைதி கூட்டணி' என பெயரிடப்பட்டுள்ளதுடன், அதன் சின்னமாக இதயமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.