New year offer 2017

இலங்கை செய்திகள்

அதிநவீன தீயணைப்பு சாதனங்களுடன் இலங்கையில் தயாரிக்கப்பட்ட படகு வெள்ளோட்டம்

02/10/2020

முழுமையாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படகு வெள்ளோட்டம் இன்று கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் பியல் டி சில்வா தலைமையில் நடைபெற்றது.

சோலஸ் மெரின் லங்கா தனியார் நிறுவனத்தினால் இந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படகு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும். மணிக்கு 35 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடிய இந்த படகு 17.9 மீற்றர் நீளமும் 6.91 மீற்றர் அகலமும் கொண்டதுமாகும். இப்படகு அதிநவீன தீயணைப்பு சாதனங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

அத்துடன் இரண்டு அமுக்க சீராக்கிகளும் அதி நவீன மின்னணு சாதனங்களும் இப்படகில் பொறுத்தப்பட்டுள்ளது. இப்படகை தயாரித்தவர்களை வெள்ளோட்டத்தின் பின்னர் கடற்படை தளபதி பாராட்டினார்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறான படகுகள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் அது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் என்று கடற்படை தெரிவித்துள்ளது.