New year offer 2017

இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் கைது - சிவனொளிபாதமலைக்கு சென்ற இளைஞன்

02/10/2020

சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காகச் சென்ற 31 வயது இளைஞர் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்றிரவு  கைது செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த இளைஞரை நேற்றிரவு 11 மணியளவில் நல்லத்தண்ணி மக்கர தோரணை பகுதியில் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதாக ரக்காடு அதிரடிப் படை அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அதிகாரி தெரிவிக்கையில்,

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.