New year offer 2017

இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் - தாக்குதல் நடாத்தியோர் உடன் கைது செய்யப்படவேண்டும்

02/10/2020

கிளிநொச்சி கல்வி வலய பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் அதிபர், ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கைதுசெய்து நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என கோறிக்கை விடுத்துள்ளதுடன் இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் நிகழாமல் இருக்க வேண்டும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. 

இது தொடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

பாடசாலையில் எத்தகைய சம்பவங்கள் நடைபெற்றாலும் அது சட்டரீதியாக அணுகப்பட்டு குற்றமிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்திற்கு மாற்றுக்கருத்துக் கிடையாது. மாறாக சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது.

அதிலும் அதிபர், ஆசிரியர்மீது தாக்குதல் நடாத்தி பாடசாலையை மூடி அடாவடியில் ஈடுபட எவருக்கும் உரிமையில்லை. இதனால் ஒட்டுமொத்த அதிபர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதோடு அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகின்றது.

இத்தகைய சம்பவங்களை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் நிகழாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.