New year offer 2017

இலங்கை செய்திகள்

அங்கஜன் - கல்வியில் முன்னேற்றமடைவதன் மூலமே எமது உரிமைகளை பெற்றக் கொள்ள முடியும்

02/11/2020

கல்வியில் முன்னேற்றமடைவதன் மூலமே எமது உரிமைகளை பெற்றக் கொள்ள முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, பூநகரி, முழங்காவில் ஆகிய பகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பு அலுவலகங்கள் இன்று (10-02-2020) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பொருளாதார ரீதியில் இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு இந்த புதிய அரசு தீர்மானித்துள்ளது.

அந்த அடிப்படையில் பட்டதாரிகளுக்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்புக்களை இந்த அரசு வழங்கவுள்ளது

இந்த வாய்ப்பை பயன்படுத்தி எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வோம் அத்துடன் மக்களின் தேவைகளையும் இனங்கண்டு அதனையும் தீர்க்க இந்த அலுவலகங்கள் உதவியாக இருக்கும். யாழ் பல்கலைக்கழகத்திலும் கிளிநொச்சி வளாகத்திலும் இடம் பெற்ற சம்பவத்தினால்  எனது கல்வி பின்னடைந்து செல்கின்றது. அடுத்த தலைமுறை கல்வியில் முன்னேற்ற வேண்டும் என்று எல்லோரும் பாடுபடுகின்றனர்.

ஆனால் இன்று பிள்ளைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில்; பிரதேசத்திற்கான மக்கள்தொடர்பு அலுவலகமும் பூநகரிப்பிரதேசத்திற்கான மக்கள் தொடர்பு அலுவலகமும் கண்டாவளைப் பிரதேசத்திற்கான  இன்று திறந்துவைக்கப்;பட்டுள்ளது.

கிளிநொச்சி முழங்காவில் பகுதிக்கான அலுவலகம் முழங்காவில் பகுதியில் இன்று காலை 9.30 மணிக்குபாராளுமன்ற உறுப்பினர்அங்கஜன் இராமநாதன் அவர்களால் திறந்துவைக்கப்;பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து  பூநகரிப்பிரதேசத்திற்கான அலுவலகம் பூநகரி வாடியடிச்சந்தியில் பகல் 11.30  மணிக்கு திறந்து வைக்கப்;பட்டுள்ளது.

தொடர்ந்து கண்டாவளைப்பிரதேசத்திற்கான அலுவலகம் திறந்து வைக்கப்ட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கட்சியின் ஆதரவாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள்  பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.