New year offer 2017

இலங்கை செய்திகள்

பாலித - கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை உருவாக்கும் நோக்கம் எவருக்கும் கிடையாது

02/11/2020

பொதுக்கூட்டணியின் சின்னம் யானை சின்னமாகவே இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான உறுப்பினர்களின்   கோரிக்கையாகவுள்ளன.

அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தையின் ஊடாக  இவ்வாரத்தில் தீர்வை பெற்றுக் கொள்வோம். ஐக்கிய தேசிய கட்சியை பிளவுப்படுத்தி புதிய கட்சியை உருவாக்கும் நோக்கம் எவருக்கும் கிடையாது என  பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே  பண்டார தெரிவித்தார்..

ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டாவது செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை கட்சி தலைமையகத்தில் கூடியது.  

செயற்குழு கூட்டம் நிறைவு பெற்றதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து  தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.