New year offer 2017

இலங்கை செய்திகள்

சிறிதரன் -அந்நிய கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டவர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்

02/12/2020

நாங்கள் எங்கள் பண்பாட்டியலை மறந்தவர்களாக அந்நிய கலாச்சாரத்திற்கு அடிமைப் பட்டவர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இதுவும் ஓருவகையான இன ஒடுக்கு முறையே எனத் தெரிவித்தார்.

கிளிநொச்சி பளை மாசார் அ.த.க. பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டியின் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையிலேயே

எமது பண்பாட்டினை கட்டிக்காப்பதற்காய் மாணவர்கள் கற்கவேண்டும். தமிழர்களுக்கு என்று தனித்துவமான கலச்சாரங்களும் பண்பாட்டியலும் இருக்கிறது எங்களிடம் இருந்து பல இனங்கள் தங்களது கலாச்சாரத்தை கட்டியெழுப்பியிருக்கிறார்கள்.

 ஆனால் நாங்கள் எங்கள் பண்பாட்டியலை மறந்தவர்களாக அந்நிய கலாச்சாரத்திற்கு அடிமைப் பட்டவர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதுவும் ஓருவகையான இன ஒடுக்கு முறையே. நாம் கற்கும் கல்வியானது எமது இனத்திற்கானதாயும் எமது பண்பாட்டினையும் கட்டிக்காக்கும் வகையில் அமைய வேண்டும் என்றார்.