New year offer 2017

இலங்கை செய்திகள்

அணு மின்உற்பத்தி நிலையத்தை இலங்கையில் அமைக்க ரஷ்யா ஆராய்வு

02/12/2020

இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க ரஷ்யா ஆராய்ந்து வருகிறது.

அத்தோடு நாட்டில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கருத்திற்கொண்டே ரஷ்யா இவ்வாறு ஆராய்ந்து வருவதாக கொழும்புக்கான ரஷ்ய தூதர் யூரி மெட்டேரி  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கை அரசாங்கம் மாசற்ற எரிசக்திக்கு ஆதரவளிப்பதால் , நீண்டகால நவடிக்கையின் மூலம் மட்டுமே இவ்வாறான திட்டம் நடைமுறைப்படுத்த சாத்தியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று இலங்கையில் அணுசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு நீண்டகால முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு அரசுகளுக்கிடையிலான ஒற்றுமையையும் , பொருளாதார வளர்ச்சியையும் கருத்திற்கொண்டு இலங்கையில் அணுமின் உற்பத்தி நிலையத்தை உருவாக்குதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென மெட்டேரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.