New year offer 2017

இலங்கை செய்திகள்

பொலிஸார் விசாரணை - 26 நாட்களான குழந்தை பலி

02/12/2020

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லூர் இதோப்பூர் பிரதேசத்தில் தாயுடன் சளிக்கு மருந்து எடுத்துவிட்டு வீட்டுக்கு சென்ற குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பிறந்து 26 நாட்களேயான ஆண்குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர் .

கடந்த திங்கட்கிழமை காலை சளி காரணமாக தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்குத் தாய் தனது குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார்.  

இந்நிலையில் பிறந்து 26 நாட்களேயான குழந்தை வைத்தியரால் பரிசோதிக்கப்பட்டு ஆவி பிடிக்கப்பட்ட நிலையில் மருந்துப்பாணி வழங்கப்பட்டு அதனை இரவு வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்ற நிலையில் குழந்தை மூர்ச்சை அற்றுப்போய் உள்ளதை அவதானித்த தாய் குழந்தையை தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர் குழந்தை உயிரிழந்துள்ளது எனத் தெரிவித்தாக தாயார் பொலிஸில் புகார் செய்துள்ளார். 

குறித்த குழந்தையின் சடலமானது பிரேத பரிசோதனைக்காக  சம்பூர் பொலிஸாரினால் எடுத்துச்செல்லப்பட்டு  தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.