New year offer 2017

இலங்கை செய்திகள்

லக்ஷ்மன் யாப்பா - இந்தியாவிடம் பிரதமர் கால அவகாசம் கோரியது மக்களின் நன்மைக்காகும்

02/12/2020

நாட்டின் கடன் தவணையை செலுத்தவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் இந்தியாவிடம் கால அவகாசம் கோரியது மக்களின் நன்மைக்காகும். இதுதொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானதாகும் என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

நாட்டின் அவிருத்தி நடவடிக்கைகளுக்காக அனைத்து அரசாங்கங்களும் வெளிநாடுகளில் இருந்து கடன் பெற்றுக்கொண்டிருக்கின்றது.  

நாட்டின் மொத்த கடன் தொகை கடந்த 2005 ஆம் ஆண்டு 2 ஆயிரத்தி 200 பில்லியனாக இருந்தது. அது கடந்த 2014 ஆம் ஆண்டில் 7 ஆயிரத்தி 400 மில்லியனாக அதிகரித்திருந்தது. மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கம் கடந்த 9 வருட காலத்தில் 5 ஆயிரத்தி 200 பில்லியன் ரூபா கடன் பெற்றிருந்தது. 

ஆனால் 2014 இல் இருந்து 2019 ஆம் ஆண்டாகும்போது மொத்த கடன்தொகை 14 ஆயிரம் பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த அரசாங்கம் 5வருடத்தில் 6ஆயிரத்தி600 பில்லியன் ரூபா வெளிநாடுகளில் இருந்து கடன்பெற்றுள்ளது. 

அதன் பிரகாரம் இந்த வருடம் 480 பில்லியன் ரூபா வெளிநாட்டு கடன் தவணைகள் செலுத்தவேண்டி இருக்கின்றது. நாட்டின் தற்போதைய நிலைமையில் கடன் தவணையை செலுத்த நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் அதன் பாதிப்பு நாட்டு மக்களுக்கே ஏற்படுகின்றது. 

அதனால் பொறுப்பவாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் மக்களின் நன்மை கருதி, இந்தியாவுக்கு செலுத்தவேண்டிய கடன் தவணையை மேலும் 3வருடங்கள் காலம் தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் இந்திய விஜயத்தின்போது, இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தாகவும் அவர் கூறினார்.