New year offer 2017

இலங்கை செய்திகள்

ஐ.தே.க - மஹிந்தவின் இந்திய விஜயம் இலங்கை சமூகத்தின் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது

02/12/2020

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அண்மையில் இந்தியவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இலங்கையின் சர்வதேச கடன்களை மீளச் செலுத்துவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று பிரதமர் நரோந்திர மோடியிடம் விடுத்த வேண்டுகோள் , அவரது விஜயம் குறித்து இலங்கை சமூகத்தின் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது தன்னுடன் மேலும் பலரை அழைத்துச் சென்றிருந்தார். இந்தியாவிற்கு சென்று யாத்திரைகளிலும் ஈடுப்பட்டார். மஹிந்தவின் இவ்வாறான செயற்பாட்டின் காரணமாக பாரிய செலவுகள் ஏற்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் மத்தியில் இவ்வாறான விஜயம் அவசியமானதா? , இதேவேளை இலங்கையின் சர்வதேச கடன்களை செலுத்துவதற்காக தமக்கு உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கவே இவர் அங்கு சென்றுள்ளார். இது தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளது.

எமது வீட்டிலுள்ள பிரச்சினைகளை அயல் வீட்டுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனோபாவத்தை கொண்டுள்ள எமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் , மஹிந்தவின் செயற்பாட்டால் நாட்டிற்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.