New year offer 2017

இலங்கை செய்திகள்

20,000 - 35,000 மெட்ரிக் தொன் அரிசியை சேமித்து வைக்க அமைச்சரவை அங்கீகாரம் !

02/13/2020

இந்த ஆண்டின் அரிசி விலையை உறுதிப்படுத்த 20,000 மெட்ரிக் தொன் முதல் 35,000 மெட்ரிக் தொன் வரை அரிசியை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த அரிசியானது மினுவாங்கொடை அரிசி களஞ்சிய சாலையில் இவ்வாறு களஞ்சியப்படுத்தி வைக்கப்படும்.

இன்றைய தினம் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.