New year offer 2017

இலங்கை செய்திகள்

கோட்டை நீதிவான் தீர்ப்பு - ரவீந்திர உட்­பட இரு­வ­ரையும் விடு­தலை செய்ய முடி­யாது

02/14/2020

ஐந்து  மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோ­த­மாக தடுத்து வைத்து, கப்பம் பெற்­றமை மற்றும்  காணாமல் ஆக்­கி­யமை தொடர்பில்  பிர­தான சந்­தேக நப­ரான நேவி சம்பத் எனப்­படும் கடற்­படை புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்­டினன் கொமாண்டர் ஹெட்­டி­ஆ­ரச்சி முதி­யன்­ச­லாகே சந்­தன பிரசாத் ஹெட்டி ஆரச்­சிக்கு சட்­டத்தின் பிடியில் இருந்து தப்பி மறைந்­தி­ருக்க உத­வி­யமை தொடர்பில் முன்னாள் கடற்­படை தள­பதி, பாது­காப்புப் படை­களின் முன்னாள் தலைமை அதி­காரி ரவீந்­திர விஜ­ய­கு­ண­வர்­தன உள்­ளிட்ட இரு­வரை  விடு­தலை செய்­வ­தற்­கான இய­லுமை இல்லை  என கோட்டை நீதிவான் நீதி­மன்றம் நேற்று முன்­தினம்  தீர்ப்­ப­ளித்­தது.

இந்த விவ­காரம் குறித்த வழக்கு விசா­ரணை  நேற்று கோட்டை நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது பிணையில் உள்ள சந்­தேக நபர்­க­ளான லக்­சிறி அம­ர­சிங்க எனும் தென்­னந்­தோப்பு உரி­மை­யா­ளரும் அத்­மிரால் ரவீந்ர விஜே­கு­ன­ரத்­னவும் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

 லக்­சிறி அம­ர­சிங்க சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சம்பத் மெண்­டிசும், ரவீந்ர சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுஜ பிரே­ம­ரத்­னவும் பிர­சன்­ன­மா­கினர்.  விசா­ர­ணை­யா­ளர்கள் சார்பில் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­சுந்­தர  ஆஜ­ரானார்.

இதன்­போதே , 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­கா­ரத்தின்  பிர­தி­வா­தி­யான கடற்­ப­டையின் முன்னாள்  லெப்­டினன் கொமாண்டர் சந்­தன பிரசாத் ஹெட்­டி­யா­ரச்சி, நீதி­மன்ற புறக்­க­ணிப்பில் ஈடு­பட்டு நாட்­டை­விட்டு தப்­பிச்­செல்­வ­தற்கு உதவி ஒத்­தாசை வழங்­கி­யமை தொடர்பில் ரவீந்­திர விஜ­ய­கு­ண­வர்­தன மற்றும் லக்­சிறி அம­ர­சிங்க ஆகி­யோரை விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து விடு­விக்க முடி­யாது என நீதவான் தீர்ப்­ப­ளித்தார்.

இந்த 2 சந்­தேக நபர்­க­ளுக்கும் எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி நீரூ­பிப்­ப­தற்கு போது­மான சாட்­சி­யங்கள் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்­திடம் காணப்­ப­டு­வ­தாக நீதி­மன்றம் கரு­து­வ­தா­கவும் அந்த தீர்ப்பில் நீதிவான் ரங்க திஸா­நா­யக்க  சுட்­டிக்­காட்­டினார்.

அதற்­க­மைய, குற்­ற­வியல் சட்டக் கோவையின் 120/3 சரத்­திற்கு அமைய, சந்­தே­க­ந­பர்­களை விடு­விக்­கு­மாறு கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி சந்­தேக நபர் இருவர் சார்­பிலும் முன்­வைக்­கப்ப்ட்ட கோரிக்­கையை நிரா­க­ரிப்­ப­தா­கவும்  நீதிவான் அறி­வித்தார்.

சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான உண்மைத் தன்மை குறித்து வழக்கு விசா­ர­ணையின் பின்­னரே தீர்­மா­னிக்க முடியும் என சுட்டிக்காட்டிய நீதிவான் இவ்வழக்கில் மற்றுமொறு பிரதிவாதியாக சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சியைப் பெயரிடுவது தொடர்பில் அடுத்த வழக்கு விசாரணையின்போது தீர்மானிப்பதாக அறிவித்து வழக்கை  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.