New year offer 2017

இலங்கை செய்திகள்

பெப்ரவரி 14 - இன்றைய நாளில் வரலாற்றுச் சுவடுகள்

02/14/2020

இன்றைய நாள் நிகழ்வுகள்:

748 – அபாசிதுப் புரட்சி: அபூ குராசானி தலைமையில் அசிமியக் கிளர்ச்சியாளர்கள் உமையாது மாகாணமான குராசானின் தலைநகரைக் கைப்பற்றினர்.

273 - ரோமில் பாதிரியார் புனித வலன்டைன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் நினைவாக வலன்டைன் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. (அவர் கொல்லப்பட்ட வருடம் 269, மற்றும் 270 எனவும் கூறப்படுகிறது)

1014 – திருத்தந்தை எட்டாம் பெனடிக்டு செருமனி, இத்தாலியின் மன்னர் இரண்டாம் என்றியை புனித உரோமைப் பேரரசராக்கினார்.

1076 – திருத்தந்தை ஏழாம் கிரகோரி புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியை மதவிலக்கம் செய்தார்.

1130 – இரண்டாம் இனசென்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1349 – பிரான்சின் ஸ்திராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

1400 – இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு இறந்தார். இவர் பட்டினியால் இறந்ததாக நம்பப்படுகிறது.

1556 – பேரரசர் அக்பர் முகலாயப் பேரரசராக முடிசூடினார்.

1779 – அவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டார்.

1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஜிப்ரால்ட்டர் அருகே இடம்பெற்ற கடல்சமரில் ஒரசியோ நெல்சன் தலைமையில் பிரித்தானியக் கடற்படை எசுப்பானியக் கடற்படையை வென்றது.

1804 – உதுமானியப் பேரரசுக்கு எதிரான செர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்சே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது.

1815 – கண்டிப் போர்கள்: கண்டி இராச்சியத்தைப் பிரித்தானியர் கைப்பற்றினர். கண்டி ஒப்பந்தம் மார்ச் 2 இல் கையெழுத்திடப்பட்டது.[1]

1859 – ஓரிகன் 33ஆவது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.

1876 – எலீசா கிறே, அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைப்பேசிக்கான காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர்.

1879 – சிலி இராணுவத்தினர் பொலிவியாவின் அன்டோபொகஸ்டா துறைமுக நகரைக் கைப்பற்றியதை அடுத்து பசிபிக் போர் வெடித்தது.

1899 – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அமெரிக்க நடுவண் தேர்தல்களில் பயன்படுத்துவதற்கு அமெரிக்கச் சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது.

1900 – தென்னாப்பிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன.

1912 – அரிசோனா 48ஆவது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.

1918 – சோவியத் ஒன்றியம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய யூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1).

1919 – போலந்து-சோவியத் போர் ஆரம்பமானது.

1924 – ஐ.பி.எம். நிறுவனம் அமைக்கப்பட்டது.

1929 – சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று அல் கபோனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் ஜப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: ரஷ்சியாவில் ரசுத்தோவ் நகர் நாட்சிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: துனிசியப் போர்த்தொடர்: தூனிசியாவில் நேச நாடுகளின் நிலைகள் மீது தாக்குதல்கள் ஆரம்பித்தன.

1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய நீர்மூழ்கி ஒன்று மலாக்கா நீரிணையில் செருமனி-இத்தாலிய நீர்மூழ்கியைத் தாக்கி மூழ்கடித்தது.

1946 – இங்கிலாந்து வங்கி தேசியமயமாக்கப்பட்டது.

1949 – இசுரேலிய பாராளுமன்றம் முதற்தடவையாகக் கூடியது.

1961 – 103ஆவது தனிமம் இலாரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

1966 – அவுஸ்திரேலியாவில் முன்னர் பயன்பாட்டிலிருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.

1979 – ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் பொலிஸாருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் அகப்பட்டு இறந்தார்.

1981 – டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 48 பேர் உயிரிழந்தனர்.

1987 – யாழ்ப்பாணம், கைத்தடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

1987 – தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1989 – ஜி.பி.எஸ் .திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.

1989 – யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் பேரழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்கச் சம்மதித்தது.

1989 – சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ரூகொல்லா கொமெய்னி மரண தண்டனை விதித்தார்.

1990 – பெங்களூரில் இந்தியன் ஏயார்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் உயிரிழந்தனர், 54 பேர் காயங்களுடன் தப்பினர்.

1990 – வொயேஜர் 1 விண்கலம் பூமியின் படம் ஒன்றை எடுத்தது. இப்படம் பின்னர் வெளிர் நீலப் புள்ளி எனப் பெயர்பெற்றது.

1998 – கமரூனில் யாவுண்டே நகரில் எண்ணெய்த் தாங்கித் தொடருந்து சரக்குத் தொடருந்துடன் மோதியதில் எரிநெய் கசிந்து வெடித்ததில், 120 பேர் உயிரிழந்தனர்.

1998 – கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.

2000 – நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.

2004 – மாஸ்கோ அருகே பூங்கா ஒன்றின் கூரை உடைந்து வீழ்ந்ததில் 25 உயிரிழந்தனர்.

2005 – கல்லூரி மாணவர்கள் சிலரால் யூடியூப் முதன் முதலில் வெளியிடப்பட்டது.

2005 – லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் அரீரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

2005 – பிலிப்பீன்சில் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 7 பேர் கொல்லப்பட்டு 151 பேர் காயமடைந்தனர்.

2011 – அரேபிய வசந்தம்: பகுரைன் எழுச்சி ஆரம்பமானது.

2017 – ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, வி. கே. சசிகலா உட்பட நான்கு பேர் குற்றவாளிகள் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

2018 – தென்னாப்பிரிக்காவின் அரசுத்தலைவர்பதவியில் இருந்து யாக்கோபு சூமா விலகினார்.

2018 – அமெரிக்காவில் மயாமியின் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.

2019 – புல்வாமா தாக்குதல்: இந்தியாவின், காஸ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், ஜெய்சு-இ-முகமது என்னும் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், மத்திய சேமக் காவல் படையைச் சேர்ந்த 45 பேர் கொல்லப்பட்டு, 35 பேர் காயமடைந்தனர்.

இன்றைய நாள் பிறப்புகள்: 

1483 – பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530)

1745 – மாதவராவ், மராட்டியப் பேரரசின் நான்காம் தலைமை அமைச்சர் (இ. 1772)

1838 – மார்கரெட் ஈ. நைட், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1914)

1869 – சார்ல்ஸ் தாம்சன் ரீசு வில்சன், நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய இயற்பியலாளர் (இ. 1959)

1896 – ஆர்த்தர் மில்னி, பிரித்தானிய வானியற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1950)

1898 – பிரிட்சு சுவிக்கி, சுவிட்சர்லாந்து-அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1974)

1901 – பி. சாம்பமூர்த்தி, தமிழக இசையியல் அறிஞர் (இ. 1973)

1904 – போரிசு வொரந்த்சோவ்-வெல்யமினோவ், சோவியத்-ரஷ்ய வானியற்பியலாளர் (இ. 1994)

1914 – இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி, தமிழக மிருதங்கக் கலைஞர் (இ. 1998)

1925 – மோகன் தாரியா, இந்திய அரசியல்வாதி, சமூகச் செயற்பாட்டாளர் (இ. 2013)

1929 – தேவேந்திரலால், இந்தியப் புவியியற்பியலாளர் (இ. 2012)

1933 – மதுபாலா, இந்திய நடிகை (இ. 1969)

1939 – யூஜின் ஃபாமா, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்

1943 – சங்கர் குஹா நியோகி, இந்தியத் தொழிற்சங்கத் தலைவர் (இ. 1991)

1952 – சுஷ்மா சுவராஜ், இந்திய அரசியல்வாதி (இ. 2019)

1990 – தீக்‌ஷா செத், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

 

இன்றைய நாள் இறப்புகள்:

269 – புனித வேலண்டைன், உரோமைக் கத்தோலிக்க ஆயர், புனிதர் (பி. 176)

1405 – தைமூர், துருக்கிய-மங்கோலியப் பேரரசர் (பி. 1336)

1779 – ஜேம்ஸ் குக், ஆங்கிலேயக் கப்பற் தளபதி, நாடுகான் பயணி (பி. 1728)

1943 – டேவிடு இல்பேர்ட்டு, ரஷ்ய-ஜெர்மனிய கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1862)

1950 – கார்ல் குதே யான்சுகி, அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1905)

1964 – வி. டி. கிருஷ்ணமாச்சாரி, இந்திய அரசியல்வாதி (பி. 1881)

1975 – பி. ஜி. வுட்ஹவுஸ், ஆங்கிலேயப் புதின எழுத்தாளர் (பி. 1881)

1968 – அ. ந. கந்தசாமி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1924)

1992 – எஸ். குலேந்திரன், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முதலாவது ஆயர் (பி. 1900)

1995 – யு நூ, பர்மாவின் 1வது பிரதமர் (பி. 1907)

2018 – மோர்கன் சுவாங்கிராய், சிம்பாப்வேயின் 2வது பிரதமர் (பி. 1952)

இன்றைய சிறப்பு நாள்:

இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் (ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை)

வலன்டைன் தினம்