New year offer 2017

இலங்கை செய்திகள்

சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் - மாற்றுத் தலை­மையைக் கண்டு கூட்­ட­மைப்பு அஞ்­சு­கின்­றது

02/14/2020

தமிழ் மக்கள் தேசிய கூட்­ட­மைப்பு என்ற புதிய மாற்­றுத்­த­லை­மையைக் கண்டு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட பலர் அஞ்­சு­கின்­றார்கள் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார். 

யாழ்.ஊடக அமை­யத்தில் நேற்று பிற்­பகல் நடந்த செய்­தி­யாளர் சந்­தீப்பில் கலந்து கொண்டு கருத்து வெளி­யிடும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

இவ்­வி­டயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்:- 

தமிழ் மக்கள் தேசிய கூட்­ட­மைப்பு என்ற புதிய முன்­னணி ஒன்று உரு­வா­கிய பின்னர் சில விமர்­ச­னங்கள் அல்­லது குற்­றச்­சாட்­டுக்கள் போன்­றவை முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

இதை­த்த­விர இந்த புதிய கூட்­ட­மைப்பு தொடர்பில் சிலர் அச்சம் கொண்­டுள்­ள­தையும் எங்­களால் பார்க்கக்கூடி­ய­தாக உள்­ளது. 

குறிப்­பாக தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ராக உள்ள மாவைச் சேனா­தி­ராஜா இது­தொ­தொடர்பில் கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்தார். குறிப்­பாக நாங்கள் மக்­க­ளு­டைய வாக்­கு­களை பிரிப்­ப­தற்­கான முயற்சி­களை மேற்­கொண்­டுள்ளோம் என்றும் இதனால் எந்த பயனும் வரப்­பே­வ­தில்லை எனதெரிவித்துள்ளார். 

வாக்­குகள் பிரிந்தால் தமக்குக் கிடைக்கும் ஆச­னங்கள் கிடைக்­காமல் போய்­விடும் என்ற பிரச்­சி­னையே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது. தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பினர் கடந்த காலங்­களில் விட்ட தவ­று­களை பற்றி சிந்­திப்­பதை விட ஆச­சனங்கள் தங்­களை விட்டு போய்­விடக்கூடாது என்­பதில் மிகக் கவ­ன­மாக உள்­ளார்கள். 

பௌத்­தத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கு­வதற்கும் வடக்கு – கிழக்கு இணைப்பைக் கைவிட்டும் சமஸ்­டியை கைவிட்டும் அர­சாங்­கத்தை முழு­மை­யாக பாது­காக்கும் நட­வ­டிக்­கை­யி­லேயே தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு தொடர்ந்து செய­ற்பட்டு வரு­கின்­றது. 

இத­னாலேயே மாற்றுத் தலைமை என்ற ஒன்று உரு­வாக்கம் தேவைப்­பட்­டது. 2017 ஆம் ஆண்டே இந்த மாற்­றுத்­த­லைமை பற்றி பேசப்­பட்­டு­வந்­தத்து. அப்­போ­து­கூட தாங்­கள்­ விட்ட தவறை திருத்திக்கொண்டு எல்­லே­ரையும் இணைத்துச் சரி­யான பாதையில் பயணிப்ப­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­மைப்பு தவ­றி­விட்­டது. 

மிக நீண்­ட­கா­ல­மாக போராடி, பல இலட்சம் மக்கள் உயிர்த்தியாகம் செய்து குறைந்­த­பட்சம் ஒன்­று­பட்ட நாட்­டுக்குள் தீர்­வினை பெற்றுக்கொடுக்­காமல், தங்­க­ளுக்கு தேவை­யான சலு­கை­களை பெற்றுக் கொள்­வ­தைத்தான் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் செய்­தார்கள். 

இதைத்தான் கடந்த நான்­கரை வரு­டங்­க­ளாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தொடர்ந்து செய்து வந்­தது. இத­னால்தான் இன்று மாற்று அணி ஒன்று உரு­வா­கி­யுள்­ளது. இந்த மாற்று அணி நிச்­சய­மாக தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி பயணிக்கும். 

இது குறித்து இந்தியாவுடன் மட்டுமல்லாமல் அமெரிக்கா, பிரித்தானிய நாடுகளுடனும் பேசி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் என்றார்.