New year offer 2017

இலங்கை செய்திகள்

பிரதமர் - போதைப்பொருள் ஒழிப்பிற்கு அனைத்து மாணவர்களின் ஒத்துழைப்பும் அவசியம்

02/14/2020

பாடசாலை மாணவர்களின் கல்வியினை சீர்குலைத்துள்ள போதைப்பொருள் பாவனையினை முற்றாக இல்லாதொழிக்க   அரசாங்கம் உரிய  நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, போதைப்பொருள் ஒழிப்பிற்கு  பாடசாலை  மாணவர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

வெளிநாடுகளில்  பணிபுரியும் இலங்கை  பிரஜைகளின்  பிள்ளைளுக்கு புலமைபரிசில் வழங்கும் நிகழ்வு இன்று அலரிமாளிகையில் இடம் பெற்றது. 

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்  பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாணவர்களின்  நலன்  கருதி அரசாங்கம்  வழங்கும்   புலமைபரிசில்களை மாணவர்கள் பயனுடையதாக மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். சிறந்த பிரஜையாக வாழ்வதே நாட்டுக்கு செய்யும் பிரதி உபகாரமாகும் எனவும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.