New year offer 2017

இலங்கை செய்திகள்

உரிய தொற்றுநீக்கல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் புகையிரத சேவை!

03/19/2020

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக நாடு முழுவதும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழ்நிலையில், உரிய தொற்றுநீக்கல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக புகையிரத சேவைகள் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.

முழு நாட்டையும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, அவற்றுக்கு ஒத்துழைப்பை வழங்கும் விதமாக புகையிரத சேவைகள் திணைக்களத்தினாலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் புகையிரத சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.