New year offer 2017

இலங்கை செய்திகள்

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு

03/19/2020

இலங்கையில் மேலும் 4 பேர் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக 6 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சீன பெண் உட்பட இலங்கையில் மொத்தமாக 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.