New year offer 2017

இலங்கை செய்திகள்

பொதுத்தேர்தலை நடத்த முடியாது : மஹிந்த தேசப்பிரிய முக்கிய அறிவிப்பு !

03/19/2020

பொதுத்தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடாத்த முடியாதேன தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாதெனவும் தேர்தல் தினம் குறித்து மார்ச் 26 இல் முடிவு செய்யப்படும் எனவும்  தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மேலும் தெரிவித்தார்.

இன்றுடன் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் காலம் நிறைவைடைந்துள்ள நிலையிலேயே எதிர்வரும் பொதுத் தேர்தலை தற்போது நடத்துவற்கு வாய்ப்புகள் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.