New year offer 2017

இலங்கை செய்திகள்

இன்றும் முடங்கியது கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கை...!

03/20/2020

நாட்டை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக,கொழும்பு  பங்கு சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20 5.33 % வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையால் இவ்வாறு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 2.61% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் இவ்வாறு தொடர்ச்சியாக இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.