New year offer 2017

இலங்கை செய்திகள்

நாட்டின் நிலைமை கருதி சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஊடக சந்திப்புகளை நிறுத்தியது

03/21/2020

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு மறு அறிவித்தல் வரை சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து ஊடகவியலாளர் சந்திப்புக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இன்றைய தினம் (சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு மறு அறிவித்தல் வரை கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்றுவந்த அனைத்து ஊடகவியலாளர் சந்திப்புக்களும் இடைநிறுத்தப்படுகின்றன.

தற்போதைய அவதானத்திற்குரிய சூழ்நிலையில் மக்களை முன்நிறுத்தி ஆற்றப்பட வேண்டிய எமது கடமையிலிருந்து நாம் ஒருபோதும் விலகமாட்டோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.