New year offer 2017

இலங்கை செய்திகள்

கேப்பாபுலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் மையத்துக்கு இன்றும் 5 பஸ்களில் அழைத்துவரப்பட்ட மக்கள் !

03/22/2020

கேப்பாபுலவு விமானப்படைதளதில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு தனிமைப்படுத்தல் மையத்துக்கு இந்தியாவில் இருந்து வருகைதந்த மேலும் ஒரு தொகை மக்கள் இன்றும் அழைத்துவரப்பட்டு  தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .

வடக்கில் உள்ள ஸ்ரீலங்கா விமானப்படையின் விமான நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில்  தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா விமானப்படை அறித்துள்ளது. 

இந்த நிலையில் இந்தியாவின் பௌத்த புனித இடமான புத்தகயாவுக்கு யாத்திரை சென்று நாடுதிரும்பிய பௌத்த பிக்குகள் உட்பட நூற்றுக்கனக்கான பொதுமக்கள் 5 சொகுசு பஸ்களில் விமானப்படையினரின் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுள்ளனர்.

இவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் விமான படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்னிலையில் நேற்றும் முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படைத்தளத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையத்தில் இந்தியாவில் இருந்து வருகைதந்த 41 பேர் அழைத்து வரப்பட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது