New year offer 2017

இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இலங்கையில் அடையாளம்!

03/22/2020

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்று பிற்பகல் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 80 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பொலன்னறுவையில் 23 பேரும், கொழும்பில் 17 பேரும், கம்பஹாவில் 12 பேரும் புத்தளத்தில் 6 பேரும், மட்டக்களப்பில் 4 பேரும், களுத்தறையில் 4 பேரும், இரத்தினபுரியில் 3 பேரும், பதுளையில் 2 பேரும், காலியில் 2 பேரும், வவுனியாவில் 2 பேரும், கண்டி, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய பகுதியில் தலா ஒவ்வொருவரும், மேலும் சில பகுதிளைச் சேர்ந்தோரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.