New year offer 2017

இலங்கை செய்திகள்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மலையகத்தை சென்றடைந்தன!

03/22/2020

ஊரடங்கு சட்ட அமுலில் இருக்கும் இத்தருவாயில் அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்று ச.தோ.ச விற்பனை நிலையங்களுக்கு லொறிகள் மூலம் மலையகத்தை சென்றடைந்துள்ளது.

கொழும்பு ,கம்பஹா ,புத்தளம் மாவட்டத்தைத் தவிர இலங்கையின் ஏனைய இடங்களில் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை ஊரடங்கு நீக்கப்படும் வேளையில் இப்பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்று சதோச விற்பனை தெரிவித்துள்ளன. 

கூடுதலாக டின்மீன்கள், மைசூர் பருப்பு, பெரிய வெங்காயம், கோதுமை மா, பால்மா, அரிசி ,சீனி போன்ற பொருட்கள் விற்பனை நிலையங்களை சென்றடைந்துள்ளது.

அட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவை, தலவாக்கலை, நுவரெலியா , கந்தபளை, கொட்டகலை ஆகிய பிரதான நகரங்களில் உள்ள சதொச விற்பனை நிலையங்களுக்கே இப்பொருட்கள் சென்றடைந்துள்ளது.

குறித்த பிரதேசங்களில் வாழ்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பொருட்கள் தாராளமாக இருப்பதால் மக்கள் திங்கட்கிழமை காலை பதற்றமடையாமல் அமைதியாக வந்து பொருட்களை கொள்வனவு செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.