New year offer 2017

இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1754 பேர் கைது ; 447 வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில்

03/23/2020

நாடளாவிய ரீதியில்  கடந்த வெள்ளியன்று மாலை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறிய 1754 பேர் இன்று காலை 6.00 மணி வரையிலான 60 மணி நேர காலபப்குதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர்  பொலிஸ் அத்தியட்சர்  சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன கூறினார். 

அத்துடன் சந்தேக நபர்களுக்கு மேலதிகமாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட 447 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர்  மேலும் தெரிவித்தார்.

இவர்களில் அதிகமானோர் ஊரடங்கின் போது காரணமின்றி பாதைகளில் சுற்றித் திரிந்தோர் என பொலிஸ் ஊடகப் பணிப்பாளர்  பொலிஸ் அத்தியட்சர்  சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன  சுட்டிக்காட்டினார்.

அதனைவிட விளையாட்டு மைதானங்களில் ஒன்று சேர்ந்து மதுபானம் அருந்தியமை, வாகங்களில் பயணித்தமை, உணவகம் ஒன்றினை திறந்து வைத்தமை, குடித்துவிட்டு பாதையில் ஒழுங்கீணமாக நடந்துகொண்டமை , வர்த்தகம் செய்தமை போன்ற காரணங்கலுக்காகவும் பலர் கைது செய்யப்ப்ட்டுள்ளனர்.