New year offer 2017

இலங்கை செய்திகள்

தலைமன்னார் கடற்பகுதியில் மிதந்த 76 கிலோ கேரள கஞ்சா..!

03/23/2020

தலைமன்னார் - வடக்கு கடற்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மிதந்து வந்த 76 கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் - வடக்கு கடற்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கைகளின் போதே இந்த கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது கடலில் மிதந்து வந்த சந்தேகத்திற்கிடமான 16 பொதிகளை கைப்பற்றியுள்ள கடற்படையினர், அதிலிருந்து ஈரப்பதமான 76 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகளை கண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இதனை கைவிட்டுச் சென்றிருக்களாம் என கடற்படையினர் சந்தேகிப்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.