New year offer 2017

இலங்கை செய்திகள்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2262 பேர் கைது!

03/24/2020

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 2262 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் உள்ளிட்ட 579 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் நேற்று திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் வடமாகாணம் மற்றும்  கொழும்பு, கம்பஹா, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருந்தது. 

ஏனைய பகுதிகளுக்கு நேற்று காலை ஆறு மணியளவில் தற்காலிகமாக நீக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் அமுல் படுத்தப்பட்டது.

இதேவேளை கொழும்பு, கம்பஹா, புத்தளம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் அதனை  மீறி செயற்பட்டமை தொடர்பிலே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இதற்கமைய நேற்று திங்கட்கிழமை இரவு மாத்திரம் 226 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 78 வாகனங்கள் மீட்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் இதுவரையில் 2262 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் 579 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.