New year offer 2017

இலங்கை செய்திகள்

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இந்தியர்கள் கைது!

03/25/2020

மன்னார் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூன்று இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் பகுதியில் செவ்வாய்க்கிழமை கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் சந்தேக நபர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.  

கடந்த 13 ஆம் திகதி நாட்டுக்கு வந்துள்ள இவர்கள் 20 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  

பொலிஸார் அவர்களை தனிமைப்படுத்தி தொற்று நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.