New year offer 2017

இலங்கை செய்திகள்

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த மேலும் 208 பேர் வீடு திரும்பினர்..!

03/25/2020

கொரோனா வைரஸ் பாதுகாப்பு நிமித்தம் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் 208 பேர் இன்று (25.03.2020) அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சிசிச்சை பெற்று வந்த சுமார் 313 பேர் வரையில் அவர்களது வீடுகளுக்கு நேற்றைய தினம் (24.03.2020)அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படாத நபர்கள் தொடர்பில் இன்றைய தினம்(25.03.2020) முதல் கடும்  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி செயற்பாட்டை மேற்கொள்ள பொலிஸாரையும் இணைத்துக்கொள்ளவுள்ளதாக பொது சுகாதார பிரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்ர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்றும் இன்றும் வீடு திரும்பிய தனிமைப்படுத்தலுக்குள்ளானவர்களின் விபரம் வருமாறு...

இந்நிலையில், இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து 108 பேரும் கண்டக்காடு மற்றும் புனாணையிலிருந்து 203 பேரும் நேற்று (24.03.2020) ஆம் திகதி மொத்தமாக 311 பேர், 11 பேருந்துகளில் மாத்தறை, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர். 

இவர்களுடையபொருட்களை 6 லொறிகளில் ஏற்றிச் செல்லப்பட்டன. இதேபோல், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து கொவிட்-19 வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட அந்த 17 நபர்கள், மைலிட்டியில் சிறப்பாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையங்களில் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அதேவேளை 47 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில், 31 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 3224 நபர்கள் உள்ளனர் என கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேபோல், கண்டகாடு மற்றும் பூனாணை தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் உள்ள 208 பேர் கொண்ட இரண்டாவது குழு இன்று அவர்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். 

இந்த இரண்டாவது குழுக்கான அனைத்து போக்குவரத்து வசதிகளும் இராணுவத்தினால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.