New year offer 2017

இலங்கை செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கையின் நல்லிணக்கத்திற்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கத் தயார்

05/18/2020

போரினால் உயிர்நீத்த உயிர்களை நினைவுகூரும் அதேவேளை, இலங்கையின் நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு செயற்பாடுகளுக்குத் தொடர்ந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நாட்டில் 3 தசாப்த காலமாக இடம்பெற்ற போர் முடிவிற்கு வந்து நேற்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கின்றன.

அதனை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தினால் இன்று திங்கட்கிழமை  விடுக்கப்பட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இன்றுடன் யுத்தம் நிறைவிற்கு வந்து 11 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில் யுத்தத்தால் உயிர்நீத்த பல உயிர்களையும் மேலும் பல இலங்கையர்கள் மத்தியில் அதன் தாக்கம் தொடர்வதையும் நாம் நினைவுகூர்கிறோம்.

இலங்கையின் நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு செயற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து தனது உதவிகளை வழங்கும் என்பதுடன், அனைவரையும் உள்வாங்கிய எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் சட்ட அமுலாக்க செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து செயற்படுகின்றது என்று தெரிவித்துள்ளது.