New year offer 2017

இலங்கை செய்திகள்

ரஞ்சன் - கொரோனா நாட்டுக்குள் பரவியமைக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்

05/19/2020

கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவியமை தெடர்பில் அரசாங்கமே பொறுப்புக்கூறவேண்டும் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமனற் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ,  இது போன்ற நெருக்கடி நிலைமைகளின் கிடைக்கப் பெரும் நிதி உதவிகளை கொள்ளையிடும் குணம் படைத்த ராஜபக்ஷாக்களுக்கு இனி மீண்டும் நிதி மோசடிகளில் ஈடுப்படுவதற்கு இடமளிக்கமாட்டோம் என்றும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டிருக்கும் எம் நாட்டுக்குள் கொரோனோ வைரஸ் தொற்றை பரவுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும். வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் உலக நாடுகள் விமான நிலையங்களை மூடியபோது, எமது நாட்டில் பெரும் தொகையான பணத்தை செலவிட்டு சுற்றுளாப்பயணிகளை நாட்டுக்குள் வரவழைப்பதற்காக, கொரோவுக்கான தீர்மானம் இலங்கை என்பதை காண்பிக்கும் வகையில் காணொளியை வெளியிட்டனர். அதன் விளைவாலே இன்று கொரோனாவினால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம்.

கொரோனாவை அரசியல் செயற்பாட்டுக்கு எதிர்தரப்பினர் பயன்படுத்துவதாக ஆளும் தரப்பு எம்மீது குற்றம்சுமத்தி வருகின்றது. எமக்கு அவ்வாறான எண்ணம் கிடையாது.

ஆனால், ஆளும்கட்சி என்று ஒன்று இருக்கும் போது எதிர்கட்சிக்கா மக்கள் தங்களது பணத்தை செலவிடுவது ஏன்? ஜனநாயக நாடொன்றில் மக்களை காப்பதற்கான ஆட்சி முறை இடம்பெறுகின்றதா? மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றதா? என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவே மக்கள் பிரதிநிதிகள் தெரிவுச் செய்யப்படுகின்றனர். அதற்கமைய அரசாங்கம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது தொடர்பில் விமர்சனங்களை முன்னெடுக்கவே எதிர்கட்சி நியமிக்கப்படுகின்றது. எதிர்கட்சியின் செயற்பாடுகளையே நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

ஆளும் தரப்பு அமைச்சர்கள் போலியான தகவல்களை வழங்கி மக்களை ஏமாற்றி வருகின்ற நிலையில் எதிர்கட்சியின் பொறுப்பு அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பதல்ல, அதன் உண்மைத்தன்மையை மக்களுக்கு தெரிவிப்பதே ஆகும். அப்போதுதான் அரசாங்கம் தனது தவறுகளை நிவர்த்தி செய்துக்கொள்ளும். சுனாமிக்கு பின்னர் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற நிதி உதவிகளை ஒழுங்கான முறையில் பயன்படுத்தியிருந்தால், அதுவே இலங்கை மீண்டெழுவதற்கு போதுமானதாக இருந்திருக்கும் என்று பலர் தெரிவித்திருந்தனர். இந்த நிதி மோசடிகளில் ஈடுப்பட்ட ராஜபக்ஷாகளுக்கே மக்கள் மீண்டும் ஆதரவு வழங்கு ஆட்சிப் பொறுப்பை கையளித்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றினால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கும் பல நாடுகள் உலக வங்கிகள் நிதிவுதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால் ஆளும் தரப்பு எந்தவித நிதியும் கிடைக்கவில்லை என்று புறக்கணித்து வருகின்றது.

அமைச்சர் விமல் வீரவன்ச ராஜபக்ஷாக்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர் பசில் ராஜபக்ஷவே என்று அவரை விமர்சித்திருந்த சந்தர்ப்பமும் உண்டு. இது காணொளி மற்றும் குறல்பதிவுகளில் பதிவாகியும் உள்ளது. இவ்வாறான நிலைமையில் அந்த குற்றச்சாட்டுகளுக்கு பாத்திரமான பசில் ராஜபக்ஷவுக்கு நிதி முகாமைத்துவத்தை வழங்கியிருப்பது எந்தவித நியாயமாகும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலைமை தற்போது உறுவாகி வருகின்றது. ஏனைய நாட்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால், அமைதியாக வீட்டுக்குள் இருக்கும் மக்கள் தற்போது நடமாடி வருகின்றனர். வாகனங்களும் செல்கின்றன. அந்நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் நன்கு சிந்தித்து முடிவெடுப்பார்கள் என்றே கருதுகின்றேன்.

யுத்த கழத்தில் இருந்தவரை விட்டுவிட்டு அமெரிக்காவுக்கு தப்பியோடியவர்களை யுத்தத்தை வென்ற வீரர்கள் என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் குணம்படைத்த இவர்கள் இதற்போது கொரோனாவை வெற்றிக் கொண்ட வீரர்கள் யார் என்பதை அறிவிக்க முயற்சிக்கின்றனர். அதற்கேற்றாட்போல் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியும், கொரோனாவை வெற்றிக் கொண்ட முதல் வீரர் ஜனாதிபதி, இரண்டாம் வீரர் பிரதமர், மூன்றாம் வீரர் இராணுவ தளபதி என்று வர்ணித்து வருகின்றார். அப்படியொன்றால் வைத்தியர்கள், பொலிஸார் ஒன்றும் செய்யவில்லையா? கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் முதன்முதலாக பாராளுமன்றத்தில் முன்னாள் எதிர்கட்சித்தலைவர் சஜித்பிரேமதாச உரையாற்றியபோது, இதே சுகாதார அமைச்சர் கொரோனாவினால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படாது, முகக்கவசம் அணியவேண்டிய அவசியமில்லை என்று  அவரை கேளிசெய்யும் வகையில் பதிலளித்தனர். தற்போது என்ன நேர்ந்துள்ளது. தொற்றாளர்களின் தொகை ஆரயிரம் என்ற அளவுக்கு நெருங்கிவந்துக் கொண்டிருக்கின்றது.

மைத்திரி - ரணில் ஆட்சியிருந்தால் கொரோனாவை கட்டுப்படுத்திருக்க முடியாது என்று கூறுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஏன் என்றால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே  நாட்டின் எந்த குற்றச்சாட்டுகளுக்கு உட்படாத சுகாதார அமைச்சராக செயற்பட்டவர். இதனால் அவர் இருந்திருந்தால்  வைரஸ் பரவலை இதனையும் விட சிறப்பான முறையில் முகாமைத்துவம் செய்திருப்பார். இதேவேளைமுன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருந்திருந்தால் நிதி மோசடிகள் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்பட்டாலும்,  இந்த ஆட்சியில் பசில் ராஜபக்ஷ இல்லாததால் குறைந்தளவான மோசடியே இருந்திருக்கும். முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனரத்னவுக்கு எதிராக எத்தனை குற்றச்சாட்டுகள் வைத்தாலும். அவர் சுகாதாரதுறைக்காக பெரும் சேவைகளை ஆற்றியுள்ளமை ஏற்றுகொள்ள வேண்டும். அவருடைய காலத்திலே சுகாதாரதுறை முன்னேற்றம் கண்டது. தனிப்பட்ட முறையில் அவரது செயற்பாடுகள் தொடர்பில் எனக்கும் திருப்தியளிக்காத சில விடயங்கள் இருக்கின்றன.