New year offer 2017

இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 569 ஆக அதிகரிப்பு

05/19/2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்று குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 569 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், இதுவரை 992 பேர் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தற்போது வைத்தியசாலையில் 414 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய்த் தொற்று சந்தேகத்தில் 135 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைத்தியசாலையில் உள்ளார்கள்.

அதேவேளை கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளார்கள்.