New year offer 2017

இலங்கை செய்திகள்

இராணுவத் தளபதி - கொரோனா தொற்றுக்குள்ளான 578 கடற்படையினரில் 221 பேர் குணமடைவு

05/20/2020

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா  தொற்றுக்குள்ளான 578 கடற்படையினரில், 221 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், எஞ்சிய 357 கடற்படையினர்,  வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

மேலும், இன்றையதினம் 15 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 584 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.