New year offer 2017

இலங்கை செய்திகள்

ரோஹித அபேகுணவர்தன - மங்களவிற்கு பெரும்பான்மை இன மக்கள் பாடம் புகட்ட வேண்டும்

05/20/2020

பௌத்த பிக்குகளையும், பௌத்த மதத்தையும் அவமதிக்கும் விதமாகவே முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கருத்துரைக்கின்றார். பொதுத் தேர்தலின் ஊடாக பெரும்பான்மை மக்கள் இம்முறை இவருக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின்  காரியாலயத்தில் இன்று புதன் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தொடர்ந்து  பௌத்த மத பிக்குகளுக்கும் , மத கோட்பாடுகளுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தார்கள். இதன் காரணமாகவே ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியினை புறக்கணித்தார்கள்.

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர பௌத்த மதத்தை அவமதிக்கும் விதமாகவே தற்போதும் கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பார்கள்.பௌத்த மதத்திற்கு  எதிராக கருத்து தெரிவிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு பொதுத்தேர்தலின் ஊடாக தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது. மக்களின் வாழ்க்கை தற்போது வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளது. வெகுவிரைவில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றுவிக்கப்படும் என்றார்.