New year offer 2017

இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் குணமடைவு

05/20/2020

இலங்கையில் மேலும் 15 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 584 ஆக உயர்வடைந்துள்ளது.

இதுவரை இலங்கையில், 1027 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளநிலையில் 434 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, 112 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.