New year offer 2017

இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

05/21/2020

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட  பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்க புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 61 ஆயிரத்து 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 17 ஆயிரத்து 172 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உலகலாவிய ரீதியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக  கடந்த மார்ச் மாதம்  20 ஆம் திகதி முதல் நாடு பூராகவும் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. கடந்த 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு மீள் அறிவிக்கும் வரை அமுல் படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை ஏனைய பகுதிகளில் ஊரடங்கு தளத்தப்பட்டிருந்தாலும்இ தினந்தோரும் இரவு எட்டு மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்றையதினம் புதன்கிழமை காலை 6 மணிமுதல் இன்று வியாழக்கிழமை காலை ஆறு மணிவரையிலான 24 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 668 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், இவர்களிடமிருந்து 248 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு இருமாதங்களும் ஒரு நாளும்  கடந்துள்ள நிலையில், ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக 61 ஆயிரத்து 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 17 ஆயிரத்து 172 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று  காலை ஆறு மணிவரையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக   17 ஆயிரத்து 949 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதுடன்,  இவர்களுள் 6706 பேருக்கு எதிராக தன்டணையும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.