New year offer 2017

இலங்கை செய்திகள்

டெங்கு பரவும் அபாயம் அதிகரிப்பு !

05/21/2020

மழையுடனான வானிலை நீடித்து வருவதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்து இருப்பதாக டெங்க காய்ச்சல் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அருணஜயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேல், தென், சப்பிரகமுவ, மத்திய ஆகிய மாகாணங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய வைத்திய நிபுணர் மேலும் கூறியதாவது,

வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் சுமார் 19 ஆயிரத்து 446 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இவர்களில் 3361 பேர் மேல் மாகாணத்தைச்  சேர்ந்தவர்கள். தற்போது மழையுடனான காலநிலை நிலவுவதால் டெங்கு நுளம்புகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

நீர்த்தேங்கியுள்ள பகுதிகளில் நீரை அகற்றவும், கிருமி நாசினிவீசவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். டெங்கு நுளம்புகள் குறித்து மக்களுக்கு ஆலோசனை வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார். 

இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 40 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலையின் புள்ளிவிபரங்கல் தெரிவிக்கின்றன என்றார்.