New year offer 2017

இலங்கை செய்திகள்

வைத்தியர்களின் சேவைகாலம் நீடிப்பு

05/21/2020

வைத்தியர்கள்  சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது எல்லை 61 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக  அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் ஆலோசனைக்கு அமைவாக தற்போது நாட்டில் நிலவும் வைத்தியர்களுக்கான பற்றாக்குறையை கருத்தில் கொண்டு அமைச்சரவை இந்த தீர்மானத்திற்கு  ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய ஏனைய அனைத்து அரச ஊழியர்களினதும் ஓய்வு பெறுவதற்கான வயது எல்லை தொடர்பில் ஆராய  குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துள குணவர்தன தெரிவித்தார்.