New year offer 2017

இலங்கை செய்திகள்

இந்தோனேசியாவில் இருந்து 110 பேர் இலங்கை வந்தனர்

05/21/2020

இந்தோனேசியாவில் இருந்து 110 பேர் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளனர்.

கொரோனா எனும் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்தோனேசியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 110 பேரே இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இந்தோனோசியாவின் ஜகார்த்தாவில் இருந்து 110 பேருடன் வருகை தந்த இந்தோனேசிய விசேட விமானம் இன்று காலை 8 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இவ்வாறு வருகை தந்தை 110 பேரும் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவத்தால் அழைத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.