New year offer 2017

இலங்கை செய்திகள்

மரிக்கார் - இராணுவ ஆட்சிக்கு இடமளியோம்

05/21/2020

நாட்டுக்கும், மக்களுக்கும் நலனை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், நாட்டு மக்களின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கோ, இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்கோ நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஐக்கிய மக்கள் சக்தியில் டைக்கோட் மற்றும் சால்வை அணிந்த மோசடிதாரர்கள் கிடையாது. அதனால் யாருக்கும் துணைப்போக வேண்டிய தேவை எமக்கில்லை என்றும் அடக்குனுமுறை ஆட்சிக்கு எதிராக குறல் எழுப்புவதற்கு ஒருபோதும் அச்சமாட்டோம் என்றும் கூறினார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

புண்ணியத்திற்காக தோன்றிய ஜனாதிபதியாகவே கோதாபய ராஜபக்ஷ காண்பிக்கப்பட்டார். ஆனால் அவர் ஆட்சியைக் கைப்பற்றிய தருணத்திலிருந்து இன்று வரை கொரோனா வைரஸ் பரவல்இ எலிக்காய்ச்சல் மற்றும் வெள்ளப் பெருக்கு என்று அழிவுகளே ஏற்பட்டு வருகின்றன.

எமது ஆட்சிக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது எந்தவித விண்ணப்பங்களும் பூர்த்திச்   செய்யப்படாமல் அனைவருக்கும் உடனே நிவாரணத்தை பெற்றுக் கொடுத்தோம். ஆனால். தற்போதைய அரசாங்கம் கொரேனா நெருக்கடியால் பாதிப்புற்றுள்ள மக்களுக்கு விண்ணப்பங்கள் பூர்த்திசெய்தும் இன்னமும் முழுமையாக நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.

வைரஸ் பரவலினால் நாடுமூடப்பட்டதை அடுத்து மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலே இருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. இந்தக்காலப்பகுதியில் சிலர் அவர்களது வீடுகளிலிருந்தே தொழில் செய்யவேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. இதனால் வழமைக்கு மாறாக நீர் மற்றும் மின்சாரம், தொலைபேசி பாவனைகள் அதிகரித்துள்ளன. இதனால் கட்டணமும் அதிகரித்துள்ளது.

இதேவேளை சிலருக்கு ஊதியம்கிடைக்கப்படாமளும்  இன்னும் சிலருக்கு அரைவாசி ஊதியமே வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த கட்டணங்களை செலுத்துவது தொடர்பில் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். அரசாங்கள் அவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீத கழிவையோ அல்லது  ஆறு மாதகால கால அவகாசத்தையோ பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஓமாகம பகுதியில் சர்வதேச கிரிக்கட் விளையாட்டு அரங்கை அமைப்பதற்கு முன்னர் கொரோனா காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை, ஆடை ஏற்றுமதி, உற்பத்தி நிலையங்கள் என்பவற்றை முன்னேற்றுவது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும்.வீட்டுத்தோட்டங்கள் அமைப்பது எக்காலத்திற்கும் உகந்த செயற்பாடுகளாகும். ஆனால் அதன்மூலம் நாட்டின்

பொருளாதாரத்தை முன்னேற்றமுடியும் என்று கூறுவது மூடத்தனமானதாகும். அரசாங்கம் மக்களின் நலரனுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் நன்மைத்தரும் விடயங்களை முன்னெடுத்தால் எதிர்கட்சி என்ற வகையில் அனைத்து ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுப்போம். அதனை விடுத்து எமது ஆட்சிகாலத்தில் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த பேச்சு சுகந்திரம் ஊடகசு தந்திரம், சுயாதீனமான நசீதித்துறை என்பறை ஒழித்து அடக்குமுறைஆட்சி, அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படுதல் மற்றும் இராணுவ ஆட்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தால். அதற்கு எதிராக குறல் எழுப்புவோம்.

அரசாங்கத்தின் துணையில் இருக்க வேண்டிய தேவை எமக்கில்லை. ஐக்கிய மக்கள் சக்திக்குள் டைக்கோட் அணிந்த மோசடிதாரர்களோ, சால்வை அணிந்த மோசடிகாரர்களோ கிடையாது. நாட்டிலர்  இதுவரையிருந்த ஆட்சிமுறைக்க மாறுப்பட்ட முறையிலான மக்களின் நலனைமட்டும் கருத்திற்கொண்ட ஆட்சியை முன்னெடுப்பதற்காகவே சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.