New year offer 2017

இலங்கை செய்திகள்

யாழில் சம்பவம் - பிறந்து 4 நாட்களான சிசுவை மலசலகூடக் குழிக்குள் வீசிய தாய் கைது

05/21/2020

தாயொருவர், பிறந்து நான்கு நாட்களேயான சிசுவை மலசலக்கூட குழிக்குள் விட்டு சென்ற சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் இட்டுச் சென்ற, தாயொருவரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியிலுள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.

நான்கு நாள்களுக்கு முன்னர் குறித்த தாய் இச்சிசுவை பெற்றெடுத்துள்ளார்.

பின்னர் அந்த சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தின் குழிக்குள் தாயார் வீசியுள்ளார்.

நான்கு  நாட்களாகிய நிலையில் சிசுவின் உடல் அழுகியதால், அயலில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு  துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், அச்சுவேலி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டதுடன், தாயாரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், சந்தேக நபரான பெண்ணின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.