New year offer 2017

இலங்கை செய்திகள்

சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பதவி நீக்கம்

05/21/2020

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்தும் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும் டபிள்யு.ஜி.ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தலைமையில் கொழும்பிலுள்ள கட்சி தலைமையகத்தில் மாவட்ட தலைவர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவிக்கையில்,

கட்சியின் தீர்மானங்களுக்கு முரணாக செயற்பட்டமையின் காரணமாகவே டபிள்யு.ஜி.ரனசிங்க சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்தும் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

தற்போது அந்த வெற்றிடத்துக்கு நுவரெலியா மாவட்ட தலைவராக ரொஷான் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு சட்டத்தரணி ரஞ்சித் த சில்வா மஸ்கெலியா தொகுதியின் பதில் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தீர்மானங்களுக்கு முரணாக செயற்படுபவர்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாமல் செயற்படுபவர்களுக்கு எதிராக இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றார்.