New year offer 2017

இலங்கை செய்திகள்

இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 8 பேரில் ஒருவர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர், 7 கடற்படையினர்

05/23/2020

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 08 பேரில், 07 பேர் கடற்படை வீரர்கள் எனவும், ஒருவர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவரெனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளதாகவும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 620 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 439 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 110 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.